டாஸ்மானியா:-ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட டாஸ்மானியா தீவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் 100 வயதான ஒரு கிளி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த கிளிக்கு சரணாலய ஊழியர்கள் பிறந்தநாள் கொண்டாடினர்.
100 என்ற வடிவத்தில் உருவாக்கப்பட்ட கேக்கில், மூன்று மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து, அதை அந்த கிளிக்கு பரிசாக அளித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து அந்த கிளிக்கு வாழ்த்து செய்தி வந்துள்ளது. 100 வயதான கிளி பற்றி ஏற்கனவே ராணியிடம் சரணாலய நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.
பொதுவாக, இந்த வகையைச் சேர்ந்த கிளிகள், வனத்தில் இருந்தால் 40 ஆண்டுகளும், சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டால் 70 ஆண்டுகளும்தான் அதிகபட்சமாக வாழும். ஆனால், அதையும் தாண்டி, 100 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது, இந்த கிளி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி