இதை வெளியே சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டிய அவர், தொடர்ந்து அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் பயந்துப்போய் இது தொடர்பாக யாரிடமும் மூச்சு விடாமல் இருந்து விட்டாள்.இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணின் தங்கையான 11 வயது சிறுமியையும் அவர் கற்பழித்து, சீரழித்தார். ஆனால், அந்தச் சிறுமி, தனது அக்காவைப் போல் அமைதியாக இருந்துவிடாமல் நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறி அழுது, முறையிட்டாள்.
இதனையடுத்து, சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இருவரும் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, குற்றவாளியை கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி