செய்திகள்,திரையுலகம் விஷாலை பாராட்டிய நடிகர் விஜய்!…

விஷாலை பாராட்டிய நடிகர் விஜய்!…

விஷாலை பாராட்டிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஷால் காரைக்குடியில் புதுப்படங்கள் ஒளிபரப்பும் லோக்கல் சேனல் நிறுவனர் ஒருவரை பிடித்தார். அதேபோல் சமீபத்தில் திருப்பூரில் புதுப்படங்கள் விற்கும் திருட்டு விசிடி கும்பலை அவரே நேராக சென்று பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

இப்படி திருட்டி விசிடிக்கு எதிராக போராடி வரும் விஷாலை ஒரு சினிமா பிரபலம் பாராட்டி டிவிட் செய்துள்ளார். அதுவேறு யாரும் ‘கத்தி’ படத்தின் நாயகன் ‘இளைய தளபதி’ விஜய். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், விஷால் உங்களை பார்த்தால் பெருமையாக இருக்கிறது. திருட்டு விசிடியை ஒழிக்க சொல்வதை விட செயலில் இறங்கியது சூப்பர். திருட்டு விசிடியை நிறுத்துவோம் என்று விஜய் டிவிட் செய்துள்ளார். இதற்கு விஷாலும், மிக்க நன்றி விஜய் சார், உங்களின் இந்த பாராட்டு எனக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது என்று டிவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி