ரஜினிக்கு அடுத்து யார் என்ற புதிய சர்ச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உருவானது. விஜய் தான் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ என்று செய்திகள் வெளிவர ரஜினிகாந்த் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.கொஞ்சம் நாள் அப்பிரச்சனை இல்லாமல் இருந்தது, தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது. ‘கத்தி’ படத்தின் வசூல் 12 நாட்களில் சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்ததை இயக்குனர் முருகதாஸ் வெளியிட, விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், வசூல் மன்னன் என அவருடைய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
அஜீத் ரசிகர்கள் ‘என்னை அறிந்தால்’ 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைக்கும் என்று கமெண்ட் போட, ரஜினி ரசிகர்கள் ‘லிங்கா’ படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்று இவர்கள் கமெண்ட் செய்ய, அஜீத், விஜய், ரஜினி ரசிகர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி