அதே சமயம், தெலுங்கில் ‘ஐ’ படத்தின் டப்பிங் உரிமை கடந்த சில மாதங்களுக்கு முன்பே சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு விட்டது. இப்போது படத்தின் ஏரியா வாரியான வியாபாரம் ஆகியுள்ளதாம். குறிப்பிட்ட வினியோக ஏரியாவான கிருஷ்ணா மாவட்டத்தில் ‘ஐ’ படம் சுமார் 2.50 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாம். அந்த ஏரியாவைப் பொறுத்தவரையில் இதுவரை 6 படங்கள் மட்டுமே 2.50 கோடிக்கு மேல் வசூல் செய்து கொடுத்துள்ளதாம்.
அப்படியிருக்க ஒரு தமிழ் டப்பிங் படத்திற்கு இந்த அளவிற்கு வியாபாரம் நடந்துள்ளது தெலுங்கு வினியோகஸ்தர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளதாம். அடுத்து ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படமும் தெலுங்கில் வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து தெலுங்குத் திரையுலகில் தமிழ் டப்பிங் படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதை தெலுங்குத் திரையுலகம் வியப்பாகப் பார்த்து வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி