சென்னை:-‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடியாக இயக்குனர் அவதாரம் எடுத்தார் அட்லி. ஒரே படத்தின் மூலம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இந்த 27 வயது இளைஞருக்கு, ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்த கிருஷ்ண பிரியாவுடன் காதல் மலர்ந்தது.
தங்களது எண்ணங்களை முறைப்படி பெற்றோரிடம் தெரிவித்து, சம்மதமும் வாங்கிய இந்த ஜோடிக்கு செப்டம்பர் 7ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு வருகிற 9ம் தேதி சென்னை ஹயாத் ஹோட்டலில் மாலை நடைபெறவிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி