சென்னை:-ரஜினியின் ‘லிங்கா’ பட டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் ரஜினி இளமையாகவும் ஸ்டைலாகவும் கலக்கியதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பட்டு வேட்டி, சட்டையில் மக்களை பார்த்து கும்பிடுவது போன்றும் அனுஷ்காவுடன் ஸ்டைலாக நடனம் ஆடுவது போன்றும் வில்லன்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்றும் ஆற்று பாலத்தின் மேல் கம்பீரமாக நிற்பது போன்றும் தோன்றும் டிரெய்லரில் ரஜினி இருந்தார்.
ஒவ்வொரு காட்சியும் ரசிக்கதக்கவையாக இருந்தன என்று ரசிகர்கள் தெரிவித்தனர். ‘லிங்கா’ படத்தை டிசம்பர் 12–ந்தேதி ரஜினி பிறந்த நாளில் திரையிட திட்டமிட்டனர். ஆனால் டப்பிங் ரீ-ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் அதற்குள் முடியுமா? என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது. பணிகள் முடியாவிட்டால் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்படலாம் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி