சிட்னி:-ஆஸ்திரேலியாவில் நியூமேன் நகரில் மது ‘பார்’ ஒன்று உள்ளது. இங்கு வசதி படைத்தவர்கள் வந்து மது அருந்துவது வழக்கம். சமீபத்தில் அதன் முன்பு திடீரென ஒரு குட்டி விமானம் வந்து நடுரோட்டில் இறங்கியது. பொதுவாக அங்கு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்துவார்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக 2 இருக்கைகளை கொண்ட மஞ்சள் நிற விமானம் வந்து இங்கு நிறுத்தப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
உடனே அங்கு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது அந்த மது பாரில் வந்து ‘பீர்’ குடிக்க 37 வயது வாலிபர் ஒருவர் அந்த விமானத்தில் வந்து இறங்கியது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அந்த விமானம் சங்கிலியால் கட்டி இழுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் மிகவும் அபாயகரமானது என போலீசார் தெரிவித்தனர். இக்குற்றத்துக்கான நடவடிக்கை குறித்து சட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி