கடந்த நவம்பர் 1ம் தேதி கர்நாடக மாநிலம் உதயமான தினம் பெங்களூரில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பெங்களூரில் சில மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்குள் சில கன்னட அமைப்பினர் புகுந்து அங்கு ஓடிக்கொண்டு இருந்த கன்னட மொழி அல்லாத பிறமொழி படங்களை பாதியிலேயே நிறுத்தினார்கள். ரசிகர்களை வெளியே கிளம்புமாறு கூறினார்கள். இதனால் ராஜாஜி நகரில் உள்ள பி.வி.ஆர்.சினிமாஸ், கன்னிங்காம் ரோட்டில் உள்ள சிக்மாமால், மக்ராத் ரோட்டில் உள்ள கருடாமால் ஆகியவற்றில் ஓடிய பிறமொழி படங்கள் நிறுத்தப்பட்டன. சிக்மா மாலில் ‘கத்தி’ படம், பி.வி.ஆரில் ஷாருக்கானின் ‘ஹப்பி நியூ இயர்’ படங்கள் நிறுத்தப்பட்டன.
இது பற்றி கர்நாடக ரக்ஷணவேதிகே நிர்வாகி ஒருவர் கூறும்போது, கர்நாடக மாநிலம் உதயமான தினத்தையொட்டி நவம்பர் மாதம் முழுவதும் கர்நாடக திரையரங்குகளில் கன்னட படங்களை மட்டுமே திரையிட வேண்டும் என்றும், மற்ற மொழிப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி