416 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ.599 ஆகும். முதல் பக்க அட்டையில் அவர் கடைசியாக விளையாடிய போட்டியில் இருந்து வெளியேறி செல்லும் படம் இடம் பெற்றுள்ளது.தனது 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டை அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார்.தெண்டுல்கரின் சுயசரிதை வெளியிடும் முன்பே அதில் இடம் பெற்றுள்ள சர்ச்சைகள் வெளியே தெரியவந்தன.பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் பற்றி அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதோடு டிராவிட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்க நினைத்து என்னை கேப்டனாக்க முயற்சித்தார் என்றும் தெண்டுல்கர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருக்கிறது.மேலும் கேப்டன் பதவியால் தான் மனவேதனை அடைந்து கிரிக்கெட்டை விட்டே விலக முடிவு செய்து இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதுதவிர பல்வேறு மனம் திறந்த கருத்துக்களை சுயசரிதையில் தெண்டுல்கர் தெரிவித்து இருக்கிறார். புத்தகம் வெளியிடும் போது மேலும் பல்வேறு விஷயங்கள் தெரியவரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி