இது குறித்து ஐ.ஐ.டி. அதிகாரிகள் தெரிவிக்கையில், முன்னதாக நடத்தப்பட்ட நேர்காணல் மூலம் ஏற்கனவே 125 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நேர்காணலுக்கு வந்துள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் வரை சம்பளத்தை அதிகரித்துள்ளன. தற்போது அளிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பில் ஒரு மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.சர்வதேச அளவில் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும், முதல் முறையாக மாணவர்களை தங்கள் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்க பல நிறுவனங்கள் இறுதிக்கட்ட நேர்காணலுக்காக ஐ.ஐ.டி. கரக்பூரின் தொழில் வளர்ச்சி மையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரிவித்த ஐ.ஐ.டி. கரக்பூரின் தொழில் மேம்பாட்டு மைய தலைவர் பாராய், இந்த ஆண்டு முதல் மாணவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பெருநிறுவன பயிற்சி மையங்கள், மதிப்பீட்டு சோதனைகள், முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதல் அமர்வு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி