செய்திகள்,திரையுலகம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பொங்கல் ரிலீஸ்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பொங்கல் ரிலீஸ்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பொங்கல் ரிலீஸ்!… post thumbnail image
சென்னை:-அஜித்கௌதம் மேனன் கூட்டணி முதன் முறையாக இணைந்து பணியாற்றி வரும் படத்தின் இசை வெளியீடு எப்போது, படம் எப்போது வெளிவரும் என்ற பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டது. படத்தின் இசை வெளியீடு நவம்பர் மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாதத் துவக்கத்திலோ வெளியிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம். படப்பிடிப்பு முற்றிலுமாக டிசம்பர் மத்தியில்தான் முடியப் போகிறதாம்.

அதே சமயம் படத்தொகுப்பு, மற்ற சில வேலைகள் ஆகியவற்றை இப்போதே ஆரம்பித்து விட்டார்களாம். அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்துவிட்டால் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்துவிடலாம் என திட்டமிட்டிருக்கிறார்களாம். அஜித்தின் முந்தைய படமான வீரம் இந்த ஆண்டு பொங்கலுக்குதான் வெளிவந்தது. தற்போது அடுத்தடுத்து சில பெரிய படங்களான லிங்கா, ஐ, உத்தம வில்லன் ஆகிய படங்கள் டிசம்பருக்குள் வெளிவந்து விட்டால் என்னை அறிந்தால் கண்டிப்பாக பொங்கலுக்கு வந்து விடுமாம்.

ஒரு வேளை அந்தப் படங்கள் தள்ளிப் போனால் அஜித் அவருடைய படத்தை எந்தப் படத்துடனும் போட்டி போடாமல் தனியாக வெளியிட்டு வெற்றி பெற வைப்போம் என்று முடிவிலிருப்பதாகச் சொல்கிறார்கள். இசை வெளியீட்டின் போது பட வெளியீட்டைப் பற்றி அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி