போட்டி தொடரை பாதியில் ரத்து செய்ததால் ஏற்பட்ட இழப்பீடாக ரூ.250 கோடி வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சம்பள பிரச்சினை முடிவுக்கு வந்து இருப்பதாக அங்குள்ள பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. சம்பள பிரச்சினை குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்-வீரர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின், தென் ஆப்பிரிக்க தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்ட இழப்பீட்டு தொகை கடிதத்துக்கு 15 நாட்களில் பதில் அளிக்க 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஆலோசனைகள் நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி