2013ல் வெளியிடப்பட்ட ‘கோச்சடையான்’ படத்தின் டீசர் ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ‘லிங்கா’ படத்தின் டீசர் ஒரு நாளைக்குள் ஒன்பது லட்சம் ஹிட்ஸ்களை மட்டுமே தாண்டியுள்ளது. இதை மிகப் பெரிய சாதனை என்று சொல்ல முடியாது.
‘ஐ’ படத்தின் டீசர் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு ஒரே நாளில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பார்க்க வைத்தது. ஆனால், ‘லிங்கா’ டீசரால் ‘ஐ’ படத்தின் அந்தச் சாதனையை முறியடிக்க முடியவில்லை. ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் என்று இருந்தாலும் ‘லிங்கா’ டீசர், ‘ஐ’ டீசரைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூடத் தொட முடியாதது, ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த உண்மை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி