மும்பை:-இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சதாசிவ் அம்ரபுர்கர் இன்று அதிகாலை காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஆன்கீன், இஷாக், கூலி நம்பர் ஒன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் 2 பிலிம்பேர் விருதுகளையும், சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். 1991ம் ஆண்டு சதாக் படத்திற்காக சிறந்த வில்லனுக்கான விருதையும் பெற்றுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் தனது பள்ளி தோழியான சுனந்தா கர்மர்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிப்பில் ஆர்வம் கொண்டு நடிக்க வந்த இவர் வில்லனாகவும், கவுரவ நடிகராகவும், காமெடி நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி