இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்தது. சமீபத்தில் நடந்த பி.சி.சி.ஐ.யின் அவசர செயற்குழுவில் வெஸ்ட்இண்டீசுடனான நேரடி போட்டித் தொடரை எதிர்காலத்தில் நிறுத்திக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் போட்டியை பாதியில் ரத்து செய்ததற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ரூ.250 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது.இது தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் செயலாளர் சஞ்சய்பட்டேல் கூறியதாவது:–வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.250கோடி நஷ்டஈடு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். போட்டியை பாதியில் ரத்து செய்ததற்காக ஏற்கனவே நஷ்ட ஈடு கேட்டும் கடிதம் அனுப்பி இருந்தோம்.வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியை பாதியில் ரத்து செய்ததால் எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் அனுப்பிய நஷ்டஈடு கடிதத்துக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும், அப்படி பதில் அளிக்காவிட்டால் சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் தேவ்கேமரூனுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. ரூ.250 கோடி நஷ்ட ஈட்டை வழங்காவிட்டால் கோர்ட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெஸ்ட் இண்டீஸ் மீது வழக்கு தொடரும். போட்டியை பாதியில் ரத்து செய்ததால் ஒளிபரப்பு உரிமம், டைட்டில் மற்றும் அணி ஸ்பான்ஷர்ஷிப், டிக்கெட் ஆகியவற்றில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இதற்காகவே ரூ.250 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி