கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லிங்கா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததுடன், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ராதரவி, விஜயக்குமார் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. படத்தின் புதிய போஸ்டர்கள் தீபாவளியன்று வெளியாகின.
ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியிடுவதற்காக லிங்கா தயாராகிவருகிறது. நவம்பரில் லிங்காவின் இசை நிச்சயம் வெளியாகும் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி