அதன்படி ஷபீரும் பெட்ரோல் பங்கில் இருந்து 2000 லிட்டர் டீசலை அப்பாவிற்கு தெரியாமல் எடுத்து வருகிறார். வரும் வழியில் இந்த டீசல் தேச துரோகத்திற்கு பயன்படுத்த போகிறது என்ற தகவலை தெரிந்துக் கொள்கிறார். இதனால் டீசலை தர மறுக்கிறார். இதனால் கோபம் அடையும் அழகப்பன், உன்னையும் உன் அப்பாவையும் போலீசில் மாட்டிவிட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார். இறுதியில் ஷபீர் டீசலை கொடுத்து தீவிரவாதி தப்பித்து செல்ல உதவினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகன் ஷபீர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பியாவிற்கு படத்தில் வேலையே இல்லை. ஏ.எல்.அழகப்பன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அப்பா வேடத்திற்கு பொருந்தி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். தம்பி ராமையா சிறிதளவே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
வினோத் பாரதி ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மேட்லி பிளூசின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் திரைப்படமான ஆரோகணத்தில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தன் இரண்டாவது படத்தில் மக்களின் கவனத்தை சற்று ஈர்க்காமல் விட்டிருக்கிறார். ஒரே நாளில் நடக்கும் சம்பவத்தை சுவாரஸ்யத்தோடு எடுத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘நெருங்கி வா முத்தமிடாதே’ அதிரடி……….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி