சென்னை:-தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கத்தி படம் சம்பந்தமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சில வாரங்களுக்கு முன்புதான் எடுக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸில் விஜய் பேசும் ஆவேசமான வசனக் காட்சி தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. 2ஜி உட்பட பல ஊழல்களைப் பற்றி மிகவும் கவனத்துடன் அந்த வசனம் எழுதப்பட்டுள்ளது.
அந்த வசனத்தை விஜய் ஒரு மேடையில் அப்படியே பேச வேண்டும் என தான் ஆசைப்படுவதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆக, விஜய்யின் அரசியல் ஆசையை மனதில் வைத்தே அந்த வசனம் எழுதப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
படம் வெளிவருவதற்கு பல பிரச்சனைகள் எழுந்த போது வாயை மூடிக் கொண்டிருந்த விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும், படம் வெளியாகி வெற்றி பெற்ற பின் முதன் முதலாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இப்படி பேசியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது.
தியேட்டர்களில் ரசிகர்களின் கைத்தட்டல்களுக்காக மட்டுமே எழுதப்பட்ட வசனம் அது என்பதை அவர்கள் மறுக்க முடியாது என்பதே உண்மை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி