சென்னை:-நடிகை நயன்தாராவுக்கு, தற்போது ஆக்ஷன் கதை களத்தை கொண்ட படங்கள் தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனால், அவரின் கவனமோ சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. ‘ராணி ருத்ரம்மா தேவி’, ‘பாகுபாலி’ படங்களில் அனுஷ்கா நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அதுபோன்ற வேடங்களில் நானும் நடிக்க விரும்புகிறேன் என்றும், சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார் நயன்தாரா.
அதோடு, ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ தெலுங்கு படத்தில் சீதை வேடத்திற்காக தான் நந்தி விருது பெற்றதை, அவர்களுக்கு நினைவுபடுத்தும் நயன்தாரா, சினிமாவுக்காக கடுமையாக உழைக்கவும், ரிஸ்க் எடுக்கவும், நான் தயாராகி விட்டேன் என்றும் கூறிவருகிறார். அதனால் கூடிய சீக்கிரமே, சரித்திர படங்களில் நடிப்பதில் அனுஷ்காவுக்கு போட்டி நடிகையாக, நயன்தாராவும் உருவெடுப்பார் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி