கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் உரிமையாளரும், இந்தி நடிகருமான ஷாருக்கான் கொல்கத்தாவில் அளித்த ஒரு பேட்டியில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். அதற்காக ஒரு கால்பந்து அணியை சொந்தமாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
கொல்கத்தா அணியை வாங்க முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்தது. கொல்கத்தா அணி கிடைக்காவிட்டாலும், வேறு நகரை அடிப்படையாக கொண்ட அணியை வழங்க முன்வந்தார்கள். நான் முடியாது என்று சொல்லி விட்டேன். கொல்கத்தாவை மையமாக கொண்டு ஒரு கால்பந்து அணி கிடைக்காவிட்டால், அதன் பிறகு நான் எனது வாழ்க்கையில் மற்ற வகையிலும் கால்பந்துடன் இணைய மாட்டேன் என்று கூறி விட்டேன் என்றார்.
தன்னை விட சவுரவ் கங்குலி கொல்கத்தா அணியின் உரிமையாளராக இருக்க தகுதியானவர் என்றும் ஷாருக்கான் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி