செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தின் கதை திருடிய கதையா?… அதிர்ச்சி ரிப்போர்ட்…

‘கத்தி’ படத்தின் கதை திருடிய கதையா?… அதிர்ச்சி ரிப்போர்ட்…

‘கத்தி’ படத்தின் கதை திருடிய கதையா?… அதிர்ச்சி ரிப்போர்ட்… post thumbnail image
சென்னை:-சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளை இப்படம் மிகவும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என்று கோபி என்றவர் படம் வெளிவருவதற்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் படத்தை தடை செய்ய முடியாது என்று நீதிபதி கூறியிருந்தார்.

இது குறித்து முதன் முதலாக முருகதாஸ் பதில் அளித்துள்ளார் இதில், கோபி என்பவரை நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை. ‘கத்தி’ படத்தின் கதையை, நான் என் மனதில் உருவாக்கி, அதற்கு வடிவம் கொடுத்து, படமாக எடுத்து முடிக்க நான் பட்ட சிரமங்கள் எனக்குத்தான் தெரியும். கடந்த 10 மாதங்களாக இந்தப் படத்தை வைத்து எழுந்த பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளால் எனக்கு பெரிய மனஉளைச்சல். ஆனால், ரசிகர்கள் அதை வெற்றிப் படமாக்கியபோது அந்த வலி எனக்கு மறந்துவிட்டது. கோபியைப் போன்றவர்கள் வந்து, கதைக்கு உரிமை கொண்டாடக் காரணம், பணம் தான், இப்படி வருபவர்களுக்கு எல்லாம் நான் கொடுத்துப் பழகிவிட்டால், அதன் பிறகு அதற்கு முடிவே இருக்காது.

கோபி என்பவர் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடியாகிவிட்டது. இனி எந்தப் பிரச்னை வந்தாலும், அதையும் சட்டப்படியே சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால், இது என்னுடைய கதை தான், நான் முருகதாஸிடம் இந்த கதை கூறினேன் என்று கோபி சொல்வதால் எது உண்மை என்பது யாருக்கும் தெரியாமல் புதிராகவே உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி