லாஸ்ஏஞ்சல்ஸ்:-ஆஸ்திரேலியாவை சேர்ந்த நடிகர் ஹுக் ஜோக்மேன் (46). இவர் தோல் புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு முன்பு 2 தடவை இவரை இந்நோய் தாக்கியது. அதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்.
தற்போது 3–வது தடவையாக இவர் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் ஆலன் நியரோப் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்ற அவர் தற்போது குணமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளார். எக்ஸ்மேன், பிளாக்பஸ்டர் படங்களில் நடித்ததற்காக ஹுக் ஜோக்மேன் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி