செய்திகள்,திரையுலகம் வளைந்து கொடுத்த நடிகை அனுஷ்கா!…

வளைந்து கொடுத்த நடிகை அனுஷ்கா!…

வளைந்து கொடுத்த நடிகை அனுஷ்கா!… post thumbnail image
சென்னை:-பாகுபலி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாகிக்கொண்டிருப்பதால், அதில் அருந்ததி, ருத்ரம்மாதேவி படங்களில் இல்லாத அளவுக்கு அதிடியாக நடித்துக்கொண்டிருக்கிறாராம் நடிகை அனுஷ்கா. முக்கியமாக, இந்த காட்சிகளில ஒரு இரவு, ஒரு பகல் என இடைவிடாமல் நடிக்கிறாராம். அந்த காட்சிகளில் நடிப்பதற்கு அவருக்கு காஸ்டியூம் மற்றும் மேக்கப் போடுவதற்கே 4 மணி நேரத்திற்கு மேலாகே ஆகி விடுவதால். இப்படி அதிகப்படியான நேரம் படப்பிடிப்பு செல்கிறதாம். இப்படியே தொடர்ந்து படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறதாம்.

அதனால் சமீபத்தில் லிங்கா படத்தின் பாடல் காட்சியை வெளிநாட்டில் நடத்துவதற்காக அவரிடம் கால்சீட் கேட்டபோது, பாகுபாலி படப்பிடிப்பு பிசியாக சென்று கொண்டிருக்கிறது. அந்த பாடலை பெங்களூரிலேயே படமாக்கினால் எனக்கு வசதியாக இருக்குமே என்றாராம் அனுஷ்கா. அதற்கு, உங்கள் வசதிக்காக ப்ளானை மாற்ற முடியாது, வெளிநாட்டுக்கு வந்தாக வேண்டும் என்று கூறி விட்டார்களாம். தான் பிசி நடிகை என்பதால் தனக்காக வளைந்து கொடுப்பார்கள் என்று பார்த்த அனுஷ்கா அவர்கள் திட்டவட்டமாக சொல்லி விட்டதால், இப்போது தானே அவர்களுக்கு வளைந்து கொடுக்க தயாராகி விட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி