வாஷிங்டன்:-அமெரிக்காவைச் சேர்ந்த லான்டன் ஜோன்ஸ் எனும் 12 வயது சிறுவன் கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி முதல் ஒழுங்காக சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் உள்ளார். தொடர்ந்து பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட லான்டனின் நிலை குறித்து கவலையடைந்த அவரது பெற்றோர் பல மருத்துவமனைக்கு சென்றும் பயனில்லாமல் போனது.
அமெரிக்காவில் உள்ள ஐந்து நகர மருத்துவமனைகளில் லான்டனை பரிசோதித்த மருத்துவர்களால் சிறுவனின் உடலில் எந்த பாதிப்பு என கண்டறிய இயலவில்லை. கடந்த ஆண்டு சுறுசுறுப்பான மாணவனாக விளையாடிக்கொண்டிருந்த லான்டனால் இப்போது பள்ளிக்கு கூட ஒழுங்காக செல்ல முடியாமல் நாள் முழுவதும் சோபாவில் சோர்வாக படுத்திருக்கும் நிலை உள்ளது. லான்டனை பரிசோதித்த குழந்தை நரம்பியல் நிபுணர் மார்க் பாட்டர்சன், உலகிலேயே லான்டனுக்கு மட்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி