செய்திகள்,திரையுலகம் திருமண வதந்திக்கு நடிகை பூர்ணா மறுப்பு!…

திருமண வதந்திக்கு நடிகை பூர்ணா மறுப்பு!…

திருமண வதந்திக்கு நடிகை பூர்ணா மறுப்பு!… post thumbnail image
சென்னை:-‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன் பின் கந்தகோட்டை, துரோகி, வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு போன்ற படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பெறாமலே இருக்கிறார். தற்போது கூட தமிழ்ப் படங்களிலும், சில தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்திலும் நடித்து தென்னிந்திய நடிகை என்று பெயர் பெற்றாலும் அவரால் ஏனோ இன்னும் முன்னணி ஹீரோயின் என பெயர் எடுக்க முடியாமலே உள்ளது.இதனிடையே, கடந்த சில வாரங்களாகவே பூர்ணாவின் திருமணம் பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளியாகி வருகின்றன. அவர் விரைவில் துபாய் தொழிலதிபர் ஒருவரை மணக்கப் போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், அவற்றையெல்லாம் பூர்ணா மறுக்கிறார்.

நான் திருமணம் செய்து கொள்ளும் போது கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன். ஆனால், ரகசியமாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன், எனத் தெரிவித்துள்ளார்.பூர்ணா நடிக்க வந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவரைப் பிடிக்காத யாரோதான் இப்படி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி