இந்த ஆப்பிளை நாம் கடித்தவுடன் அதிலுள்ள செல்கள் விரிவடைந்து தேக்கி வைத்திருக்கும் இனிப்பு சாற்றை சோடாவை போல நம் வாய் முழுவதும் நிரப்பிவிடுகிறது. கிழக்கு ஜெர்மனியில் மிகவும் பிரபலமான ரெஸி வகை ஆப்பிளை மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்படுகிறது இந்த வகை ஆப்பிள். எனினும், முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே இது விற்பனைக்கு வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மேலும், சாப்பிடிக் கூடிய ஆப்பிள் பழங்களில் இதுபோன்ற ஒன்றை இதற்கு முன் நாம் பார்த்திருக்க முடியாது. அதிலுள்ள பெரிய செல்கள் நாம் நாவினில் வைத்தவுடனேயே இனிப்பு சாற்றையும், அமிலத்தையும் உமிழ்ந்து நமக்கு தித்திப்பை உண்டாக்கும். ஒரு இனிப்பு சோடாவை பருகுவதை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது இந்த ஆப்பிள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி