மும்பை:-பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ஹேப்பி நியூ இயர்’. ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள இப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. வெளியான மூன்றுநாளிலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியிருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஷாரூக்கான்.
ஆனால் இந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியவில்லை, காரணம் அவர் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். சளி மற்றும் காய்ச்சலினால் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஷாரூக் கூறியுள்ளார். மேலும் ஹேப்பி நியூ இயர் படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி