மும்பை:-ஃபராகான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் மற்றும் பலர் நடித்து உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ஹேப்பி நியூ இயர். கிட்டத்தட்ட இப்படம் உலகமெங்கும் 5000 தியேட்டர்களுக்கு மேல் வெளியிடப்பட்டிருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்ததால் முதல் நாளில் மட்டும் இப்படம் கிட்டத்தட்ட 38 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
இதற்கு முன்பு முதல் நாளில் அதிக கலெக்ஷன் செய்த படமாக ‘தூம் 3’ இருந்து வந்தது. முதல் நாள் வசூல் மட்டும் 32 கோடி ரூபாய். அதேபோல் ஒரு நாளில் அதிக கலெக்ஷன் செய்த படம் (3ம் நாளில் 34 கோடி) என்ற சாதனையையும் ‘தூம் 3’ படம் பெற்றிருந்தது. தற்போது இதுவரை வெளியான இந்திய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ஹேப்பி நியூ இயர் திரைப்படம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி