செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் மாலி நாட்டிலும் எபோலா பரவியது: 2 வயது சிறுமி பலி!…

மாலி நாட்டிலும் எபோலா பரவியது: 2 வயது சிறுமி பலி!…

மாலி நாட்டிலும் எபோலா பரவியது: 2 வயது சிறுமி பலி!… post thumbnail image
பமாகோ:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் நோய் பரவி வருகிறது. இங்கு இதுவரை 4,800 பேர் பலியாகி உள்ளனர்.10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த உயிர்க்கொல்லி நோய் பரவாமல் தடுக்க சர்வதேச நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் அதிகம் பாதித்துள்ள கினியா அருகேயுள்ள மாலி நாட்டிலும் தற்போது எபோலா நோய் பரவியுள்ளது. இங்கு 2 வயது சிறுமி, எபோலா வைரஸ் தாக்கி பலியானாள். இவள் கினியாவில் இருந்து மாலி நாட்டுக்கு சமீபத்தில் தான் வந்தாள். அதாவது, இவளது தாய் கினியாவில் சில வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அனாதையாகி விட்ட இவளை மாலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்டை நாடான கினியாவுக்கும், மாலிக்கும் இடையே தினமும் பஸ் மற்றும் டாக்சி போக்குவரத்து உள்ளது. அதனால், இங்கு எபோலா நோய் பரவியுள்ளது.

தற்போது இங்கு நடத்தப்பட்ட சோதனையில் 43 பேரை எபோலா நோய் தாக்கியுள்ளது. இவர்களில் 10 பேர் சுகாதார ஊழியர்கள். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தாக்கிய நாடுகள் பட்டியலில் மாலி 6–வது இடம் பிடித்துள்ளது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி