சென்னை:-படு விமரிசையாக இந்த வருட தீபாவளியைக் கொண்டாடி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த வருட தீபாவளி சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக அமைந்துவிட்டது. அதாவது, அவருடைய செல்ல மகள் ஆராதனாவுக்கு அக்டோபர் 22 தீபாவளி அன்றுதான் முதல் பிறந்தநாள்.
ஆகவே இந்த வருட தீபாவளியை டூ இன் ஒன்னாக அதாவது இரண்டு விழாக்களையும் சேர்த்து வைத்துக் கொண்டாடி உள்ளது சிவகார்த்திகேயனின் குடும்பம். காலையில் தீபாவளி கொண்டாட்டம், மாலையில் ஆராதனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என திருச்சியில் இருக்கும் தனது அம்மா, அக்கா குடும்பங்களுடன் தீபாவளியை கொண்டாடினாராம் சிவகார்த்திகேயன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி