செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்துக்கு சப்போர்ட் செய்த நடிகை அசின்!…

‘கத்தி’ படத்துக்கு சப்போர்ட் செய்த நடிகை அசின்!…

‘கத்தி’ படத்துக்கு சப்போர்ட் செய்த நடிகை அசின்!… post thumbnail image
சென்னை:-பல பிரச்சனைகளை தாண்டி இன்று தமிழகமெங்கும் கத்தி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், விஜய்யின் கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு ஆதரவான லைகா நிறுவனம் தயாரித்திருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் அமைப்புகள் கொடி பிடித்து வந்ததால், அதற்கு எதிராக தனது குரல் கொடுத்துள்ளார் அசின்.

அதாவது சினிமா வேறு, அரசியல் வேறு, அதனால் சினிமாவுக்கு எதிராக அரசியல்வாதிகள் குரல் கொடுப்பது முறையல்ல என்று கூறியிருப்பவர், இப்படி விஜய் படத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு முன்பு கத்தி படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார் அசின்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி