சென்னை:-விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் திருட்டு சி.டி.க்கள் திருவான்மியூர் மற்றும் பெருங்குடி பகுதியில் விற்கப்படுவதாக விஜய் ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தென்சென்னை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் கே.வி.தாமு, காஞ்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர்.சரவணன் மற்றும் எஸ்.மதன், ஜெ.ஜெ.சுதா பிரசாத், உதயா, அரிபாபு, விஜய் சந்தோஷ், தயாளன், வினோத் ஆகியோர் விரைந்து சென்று சோதனை நடத்தி 200–க்கும் மேற்பட்ட ‘கத்தி’ பட திருட்டு சி.டி.க்களை கைப்பற்றினர். அவற்றை திருவான்மியூர், கானகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினர். போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி