மஞ்சு வாரியரை போன்று இப்படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரியாகிறார் ஜோதிகா. மலையாள ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் சூர்யாவின் 2டி பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தமிழில் ரீமேக் ஆவதை அடுத்து ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது.
ஹிந்தியில் இப்படத்தை நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்க, அவரது மனைவி கஜோல் நடிக்க இருக்கிறார். அஜய் தேவ்கனை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த கஜோல் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் ரீ-எண்ட்ரியாகிறார். இப்படி ஒரே படத்தின் மூலம் மூன்று பிரபல ஹீரோயின்கள் சினிமாவில் ரீ-என்ட்ரியாவது ஆச்சர்யம்தான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி