செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக பில்லியர்ட்ஸ்: 11வது சாம்பியன் பட்டம் பெற்றார் பங்கஜ் அத்வானி!…

உலக பில்லியர்ட்ஸ்: 11வது சாம்பியன் பட்டம் பெற்றார் பங்கஜ் அத்வானி!…

உலக பில்லியர்ட்ஸ்: 11வது சாம்பியன் பட்டம் பெற்றார் பங்கஜ் அத்வானி!… post thumbnail image
லீட்ஸ்:-இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரில், உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் ‘பாய்ண்ட் பார்மட்’ பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட் மோதினர். அபாரமாக ஆடிய பங்கஜ் அத்வானி 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 11வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இவர் இந்த ஆண்டு நடந்த உலக 6–ரெட் ஸ்னுாக்கர், உலக பில்லியர்ட்ஸ் (அணிகள்), உலக பில்லியர்ட்ஸ் (தனிநபர் பாய்ண்ட் பார்மட்) தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதுகுறித்து பங்கஜ் அத்வானி கூறுகையில், 11வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பைனலில் சிறந்த வீரர்களில் ஒருவரான பீட்டர் கில்கிறிஸ்ட்டை வீழ்த்தியது பெருமையாக உள்ளது. இத்தொடரில் எனது செயல்பாடு சிறப்பாக இருந்தது. இன்று நடக்கும் ‘டைம் பார்மட்’ பிரிவு பைனலிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன், என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி