செய்திகள்,திரையுலகம் 30 கோடியை தாண்டிய ‘கத்தி’ பட வசூல்!…

30 கோடியை தாண்டிய ‘கத்தி’ பட வசூல்!…

30 கோடியை தாண்டிய ‘கத்தி’ பட வசூல்!… post thumbnail image
சென்னை:-சர்ச்சை, போராட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு என பலதரப்பட்ட தடைகளை கடந்து ஒருவழியாக தியேட்டர்களுக்கு வந்து விட்டார் ‘கத்தி’ விஜய். 22ம் தேதியில் இருந்தே கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி கத்தி திரையிடப்பட்ட எப்எம்எஸ் ஏரியாக்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில், கத்தி முதல் இரண்டு நாள் வசூல் 30 கோடியை தாண்டி விட்டதாம். அதனால் அடுத்த ஓரிரு தினங்களில் 50 கோடியை கடந்து விடும் என்கிறார்கள். மேலும் விஜய் இதுவரை நடித்த படங்களில் கத்தியே சிறந்த படம் என்கிற கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில எழுந்திருப்பதால், கத்தி படத்தின் வசூல் நாளுக்கு நாள் எகிறும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி