இந்நிலையில் வெள்ளை மாளிகையினுள் நேற்று மீண்டும் ஒரு ஆசாமி வேலி தாண்டி நுழைந்தார். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ”சீக்ரட் சர்வீஸ்” படை நாய்கள் அவரை துரத்திப்பிடித்தன. பின்னர் அவரை ”சீக்ரட் சர்வீஸ்” அதிகாரிகள் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் அந்த ஆசாமியின் பெயர் டொமினிக் அதிசன்யா (வயது 23), மேரிலாண்டை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. அவர் வெள்ளை மாளிகையினுள் வேலி தாண்டி குதித்ததின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை 90 நிமிடம் மூடப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.ஹர்ரிகேன் மற்றும் ஜோர்டான் என்ற பெயர் கொண்ட இரண்டு நாய்களும் இந்த சம்பவத்தின் போது லேசான சிராய்ப்பு காயங்கள் அடைந்தன.இதன் காரணமாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன என்று ”சீக்ரட் சர்வீஸ்” செய்தி தொடர்பாளர் எட்வின் டோனோவன் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி