கத்தி படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு வெளியானதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து தியேட்டர்கள் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்காட்டை அடுத்த வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயபாரத் தியேட்டரில் நேற்று கத்தி படம் வெளியானது. இதையொட்டி அப்பகுதி ரசிகர்கள் தியேட்டர் முன்பு விஜய்யின் பிரமாண்ட கட்–அவுட் வைத்திருந்தனர்.
படம் முடிந்ததும், வடக்கஞ்சேரியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (வயது 28) என்ற ரசிகர் ஆர்வ மிகுதியில் கட்–அவுட் மீது ஏறி அதற்கு பாலாபிஷேகம் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கட்–அவுட்டில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உன்னிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன உன்னிகிருஷ்ணன் வெல்டிங் தொழிலாளி ஆவார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி