சென்னை:-விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய இரண்டு படங்களும் இந்த தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ளது. அதனால் அவர்கள்தான் இந்த தீபாவளியின் நேரடி போட்டியாளர்கள் என்று கடந்த சில மாதங்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு ப்ரிவியூ தியேட்டரில் விஜய்யின் கத்தியும், விஷாலின் பூஜையும் வெவ்வேறு தியேட்டர்களில் டெக்னீசியன்களுக்காக திரையிடப்பட்டிருந்தது. அப்போது கத்தி படம் பார்க்க விஜய் வந்தார்.
இந்த சேதியறிந்து பூஜை படம் பார்த்துக்கொண்டிருந்த விஷால் தியேட்டரை விட்டு வெளியே வந்து விஜய்யை வரவேற்றார். அதையடுத்து சிறிது நேரம் பேசிக்கொண்ட அவர்கள் இருவரும் படங்கள் வெற்றி பெற வாழ்த்து சொன்னபடி விடைபெற்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி