சென்னை:-எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவருடனும் இணைந்தும், கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1947-ல் வெளிவந்த பைத்தியக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து சென்னை, ஆழ்வார்பேட்டை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி