செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மறைவு!…

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மறைவு!…

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மறைவு!… post thumbnail image
சென்னை:-பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் (72) சென்னையில் புதன்கிழமை காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தீபாவளி தினத்தன்று காலமானார்.

உத்தரப்பிரதேச மாநிலம், அலாகாபாதில் பிறந்த அசோக் குமார், சென்னை அடையாறில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 125-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் பல புதுமைகளைப் புகுத்திய இயக்குநர் மகேந்திரனின் அபிமான ஒளிப்பதிவாளரான அசோக் குமார், “ஜானி’, “நெஞ்சத்தை கிள்ளாதே’, “நண்டு’, “மெட்டி’ உள்ளிட்ட மகேந்திரனின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த “மன்னன்’, இயக்குநர் ஷங்கரின் “ஜீன்ஸ்’ ஆகிய படங்களுக்கும் அவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். “நெஞ்சத்தை கிள்ளாதே’ படம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை அவருக்குப் பெற்றுத் தந்தது. மறைந்த அசோக் குமாருக்கு மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். அவரது உடல், கூடுவாஞ்சேரியில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி