செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் விஜய் ரசிகரால் தியேட்டர் அதிபர் மரணம்!…

நடிகர் விஜய் ரசிகரால் தியேட்டர் அதிபர் மரணம்!…

நடிகர் விஜய் ரசிகரால் தியேட்டர் அதிபர் மரணம்!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் நடித்துள்ள கத்தி படம் தமிழகம் முழுவதும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் மிகப்பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளது.காலை காட்சிக்கு வந்த பல ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று தியேட்டரை விட்டு நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

இதனால் படம் விட்டு வெளியே வரும் போது பெரிய தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. அப்போது அங்குள்ள கண்ணாடி கதவின் அருகில் நின்று கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார் தியேட்டர் அதிபர் கிருஷ்ணன் (வயது 74). முண்டியடித்த கும்பல் மோதி கண்ணாடி கதவு உடைந்து சிதறி கிருஷ்ணன் மீது விழுந்தது. இதில் அவரது உடலின் பாகங்களை கண்ணாடி துண்டுகள் கிழித்தன. அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி