ஆனா நடிப்புன்னு வந்துட்டா சீரியசாகிடுவார். குளுமனாலில ஷூட்டிங் நடந்தபோது கஷ்டமான ஸ்டெப்புக்கெல்லாம் ஆடினார். அவர் நினைச்சிருந்தா அதை மாற்றச் சொல்லியிருக்கலாம். ஆனா நடிப்பு மேல அவருக்கு இருந்த பக்தியில அதை சொல்லவில்லை. நான் கார் ஓட்ட அவர் பக்கத்துல உட்கார்ந்து வர்ற மாதிரி ஒரு சீன். நான் அதிகமா கார் ஓட்டினதில்ல. பயந்துகிட்டே ஓட்டினேன். அவர்தான் தைரியம் கொடுத்து ஓட்டச் சொன்னார்.
படத்துல ஆர்யாவுக்கு சமமான கேரக்டர் எனக்கு. நானும் ஆக்ஷன் காட்சிகள்ல நடிச்சிருக்கேன். தனக்கு சரிசமமாக ஹீரோயின் இருப்பதை எந்த ஹீரோவும் ஒத்துக்க மாட்டாங்க ஆனா ஆர்யா ஒத்துக்கிட்டிருக்கார். அதுதான் ஆர்யா. என்கிறார் கார்த்திகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி