சென்னை:-என்னமோ ஏதோ, தலைவன் படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். இவர் தெலுங்கில் நமஸ்தே மேடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக ராகிணி திரிபேதி நடிக்கிறார். படத்தின் விளம்பரங்கள் மற்றும் புரமோசன்களில் ராகிணியை முன்னிலைப் படுத்தியும், நிகிஷாவை புறக்கணித்தும் வந்தனர்.
இதனால் நிகிஷாக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மற்றும் டி.வி.புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் நிகிஷா புறக்கணித்தார். அதன் பிறகு கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து நிகிஷா கூறும்போது: தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. இப்போது எல்லாம் சரியாகி விட்டது. படத்தின் புரமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொள்வேன். முடிந்துபோன விஷயம் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. என்கிறார் நிகிஷா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி