செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!…

எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!…

எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!… post thumbnail image
ஜெனீவா:-ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக சென்றுதுள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து ஐ.நா. சபையில் அவசர ஆலோசனை கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. உலக சுகாதார நிறுவனம் இணைந்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எபோலா நோயை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நோய் தாக்கிய நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் அதிகப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த 3 நாடுகளிலும் 5 இடங்களில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.

அங்கிருந்து செல்லும் அனைத்து பயணிகளையும் கடுமையான சோதனைக்கு பிறகு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிப்பது, மேலும் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக கண்காணிப்பது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.எபோலா நோயை கட்டுப்படுத்தும் புதிய மருந்து ஒன்று கனடா மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அந்த மருந்தை உடனடியாக பயன்படுத்துவது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி