இந்நிலையில், படத்தின் தயாரிப்பு தரப்பினருடன், தமிழ் அமைப்புகள் சார்பில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு திட்டமிட்டபடி நாளை கத்தி படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் நேற்று திடீரென மர்மநபர்கள் சிலர் சென்னையில் உள்ள தியேட்டர்களை தாக்கிவிட்டு, பெட்ரோல் குண்டுகளையும் வீசிவிட்டு சென்றனர். இதனால் கத்தி படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் உருவானது.
இந்த சூழலில், கத்தி படத்தின் ஹீரோவான விஜய், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சில நாட்களாக தமிழ் அமைப்புகள், கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்தனர். அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர் ஒத்துக்கொண்டனர். எனவே இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது. எனவே எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும், கத்தி திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். கத்தி திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த ஜெயலலிதாவுக்கும், தமிழக காவல் துறைக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி