சென்னை:-கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று படங்கள் இயக்கி வரும் தமிழ் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இந்தியில் தான் இயக்கும் படத்தில் சோனாக்ஷி சின்ஹாவைதான் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்கிறாராம். மேலும், கத்தியைத் தொடர்ந்து தான் இந்தியில் இயக்கும் அந்த படத்திற்காக தமிழில் வெளியான மெளனகுரு படத்தின் ரைட்ஸை அவர் வாங்கியிருக்கிறாராம்.
ஆனால் அந்த கதையை அப்படியே இந்தியில் இயக்கப் போவதில்லையாம். தமிழ் பதிப்பில் நாயகனாக நடித்த அருள்நிதியின் கேரக்டரில் இந்தி படத்தின் நாயகியான சோனாக்ஷி சின்ஹாவை நடிக்க வைக்கிறாராம். அவர் கேரக்டர் மட்டுமின்றி இன்னும் ஓரிரு கேரக்டரும் இதே போல உல்டா பண்ணும் அவர், தமிழில் இனியா நடித்த கதாபாத்திரத்தில் சில திருத்தங்கள் செய்து வெயிட் ரோலாக மாற்றுகிறாராம்.
தற்போது கத்தி பட வேலைகளில் தீவிரமாகியிருக்கும் முருகதாஸ், அப்படத்தின் ரிலீசுக்குப்பிறகு மீண்டும் இந்திக்கு சென்று அப்படத்தை ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கயிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி