கலிபோர்னியா:-விண்வெளி துறையில் முன்னேறியுள்ள அமெரிக்கா ஒரு ரகசிய உளவு விமானம் ஒன்றை தயாரித்தது. அதற்கு எக்ஸ்–37பி என பெயரிடப்பட்டது.இந்த விமானம் குட்டி விண்கலம் போன்று வடிவமைக்கப்பட்டது. உலக நாடுகளுக்கு தெரியாமல் மிக ரகசியமாக அந்த விமானம் விண்ணில் பறக்க விடப்பட்டது.
இந்நிலையில் அந்த விமானம் 674 நாட்களுக்கு பிறகு அதாவது 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன் தினம் காலை 9.24 மணிக்கு தரை இறங்கியது. கலிபோர்னியாவில் உள்ள வான்டன் பர்க் விமானபடை தளத்தில் அது பத்திரமாக இறங்கியது. இந்த விமானம் உளவு பார்த்து ஏராளமான தகவல்களை திரட்டி வந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
விண்ணில் பறக்கும் பலநாடுகளின் செயற்கை கோள்களை போட்டோ எடுத்து அனுப்ப இந்த உளவு விமானம் பறக்க விடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அல்லது சீனா அமைக்கும் விண்வெளி ஆய்வகம் குறித்து அறிய அனுப்பப்பட்டிருக்கலாம் என்று மற்றொரு கருத்து நிலவுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி