சென்னை:-இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஹன்சிகா பின்னர் கதாநாயகியாக பாலிவுட் சினிமா அங்கீகரிக்கவில்லை. ஆனால் தென்னிந்திய சினிமா அவரை கதாநாயகியாக தத்தெடுத்துக் கொண்டது. அதனால் தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார் ஹன்சிகா.
அரை டஜன் படங்களில் தற்போது நடித்து வரும் ஹன்சிகா, மற்ற நடிகைகளைப் போன்று தனது படக்கூலியை படத்துக்குப்படம் உயர்த்த வில்லையாம். இப்போதுவரை ஒன்னே கால் கோடி வரைதான் வாங்குகிறாராம். அதேசமயம், சில வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்றால் 1 கோடி கொடுத்தாலும் மறுபேச்சு பேசாமல் வாங்கிக் கொள்கிறாராம்.
அதனால் படங்களே இல்லாத நடிகைகள்கூட 2 கோடி, 3 கோடி என்ற சம்பளத்தை உயர்த்திக்கொண்டு செல்லும் நிலையில், படு பிசியாக நடித்து வரும் ஹன்சிகா கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொள்கிறார். இந்த நல்ல மனசு யாருக்கும் வராது என்று சில தயாரிப்பாளர்கள் ஹன்சிகாவின் புகழ் பாடுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி