சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி என்றாலே எளிமை தானே, அதை மீண்டும் நிருபித்துள்ளார் சூப்பர் ஸ்டார். லிங்கா படப்பிடிப்பு தற்போது பிஸியாக நடந்து கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் கோர்ட், ஜீன்ஸ் என யங் லுக்கில் கலக்கி வருகிறார். இந்நிலையில் தன் ஷாட் முடிந்து ஓரமாக நின்று கொண்டிருந்த அவரிடம், சார் அடுத்த ஷாட் எடுத்து முடிக்க நேரம் ஆகும், நீங்க ஹோட்டல்ல வெயிட் பண்ணுங்க என்று கூறியுள்ளனர்.
இதற்கு ரஜினி அட, அதெல்லாம் வேண்டாம், நான் அங்கு போயிட்டு வரவே, பல மணி நேரம் ஆகிடும், ஒரு கர்சீப் மட்டும் கொடுங்க, கோர்ட் காலர் அழுக்கு ஆகாம இருக்க என அதை வாங்கி கொண்டு தன் ஷாட் வரும் வரை வெயிலில் நின்று கொண்டிருந்தாராம். இதை கண்ட படக்குழு அது தான் சூப்பர் ஸ்டார் என்று கூறி வியந்தார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி